அறிமுகம்
வரலாறு
மலேசிய சைவ சமயப் பேரவையின் முதல் அமைப்புக் கூட்டம் 2001ஆம் ஆண்டில் நடந்தது. கோலாலம்பூரில் இயங்கி வந்த சைவ சமய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர் பலர் இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சைவ சமய அமைப்புகளுக்கானப் பேரவை ஒன்று அமைவது காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்றுக் கொண்டனர். பேரவையின் கொள்கை, செயல்பாடுகள் பற்றிய பல கலந்துரையாடல்களுக்குப் பின் 2011இல் பேரவை பதிவு பெற்றது.
நிறுவனர்
சைவ சமயப் பேரவை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து சைவ சமய ஆர்வலர் துணையுடன் வெற்றி கண்டவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம். முனைவர் ஐயா சைவ சித்தாந்தத் துறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் பக்தி இலக்கியம் உட்படப் பயின்று இளங்கலைப்பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத்தைச் சிறப்புப் பாடமாய்க் கற்று முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
எண் குணத்தானே என் மனத்தான்
நோக்கங்கள்
- சைவ சமயம் தனித்த பெருஞ் சமயம் என்ற உண்மையை உலகுக்கு உரத்துக் கூறுதல்.
- தமிழரின் அறிவார்ந்த சமயம் சைவ சமயமே என்ற உண்மையைப் பரப்புதல்.
- சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை உணர்த்துதல்.
- சைவ சமயத்தை இந்துக்களுக்கும் தமிழருக்குமான வாழ்க்கை முறையாகத் தேவாரம் திருவாசகம் கொண்டு பரப்புதல்.
- சைவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்துதல். பதின்ம வயதினருக்கான பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல். சைவ சமய மாத இதழ் நடத்துதல்.
- திருமுறையைப் பரப்பும் நோக்கில் வகுப்புகள், ஆய்வரங்குகள், போட்டிகள், விழாக்கள் நடத்துதல்.
சிவன் என்னும் செம்பொருள், எனையாளும் மெய்ப்பொருள்
நிகழ்வுகள் / படத்தொகுப்பு

I was introduced to Saiva Siddantham in Jan 2016. I was then completely unaware of what an awesome blessing that was. Joined the class with zero knowledge of what I am here for and with most minimal written Tamil literacy.However, now I realised, indeed, how blessed I have been the chosen one to embrace such powerful knowledge on this Earth and that too directly by the Best Siddantham Guru in Malaysia, Dr. Nagappan Arumugam. Siva Siva
Easwary Ponniah (PD Thirumanthiram Class)
,

முறையான சைவ சமயக் கல்வி என்னைப் பரம்பொருள் யாரென உணரவைத்து ஒருகடவுள் வழிபாட்டில் நிறுத்தியது. புலால் மறுத்து, நால்வர் உணர்த்திய ஒரு கடவுள்நெறியைப் பின்பற்றி என் பிள்ளைகளைச் சிறந்த சைவர்களாக வளர்ப்பதில் நான்பெருமை கொள்கிறேன்.
ப. பிரேமா (போர்ட்கிள்ளான் சைவ சமய மன்றம்)
,

சித்தாந்தம் என்னைச் சைவ சமயத்தின் பால் ஈர்த்தது. சைவ சமயத்தினைப் பின்பற்றுவதில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைப்பெறுகிறேன். முனைவர் நாகப்பன் ஆறுமுகம் ஐயா அவர்களின் வழிகாட்டலின் மூலம் சரியான இலக்கை நோக்கிச் செல்வதாக உணர்கிறேன். வாழ்க சைவ சமயம்!
பா. சாவித்திரி செல்வி (போர்ட்கிள்ளான் சைவ சமய மன்றம்)
,

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மட்டும் சைவம் என்றிருந்த நான், சிவனருள் பயனால் வாழ்நாள் சைவன் என்ற தெளிவினைப் பெற்றேன். சைவ சமய அறிவையும் தெளிவையும் பெற உதவிய சைவ சமயப் பேரவைக்கு எனது நன்றி.
ம. மகேசுவரி (போர்ட்கிள்ளான் சைவ சமய மன்றம்)
,