திருமுறைப் பெருவிழா 2017 – போட்டிக்கான பாடல்கள்

 

திருமுறைப் போட்டிக்கான பாடல்கள்

போட்டிக்கான பரிசு மற்றும் மதிப்பிடும் முறை
PDF2_new
Music1
பிரிவு 1 : வயது 5 முதல் 7 வரை
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பிரிவு 2 : வயது 8 முதல் 10 வரை
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பாடல் 4
Music1
பிரிவு 3 : வயது 11 முதல் 13 வரை
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பாடல் 4
Music1
பாடல் 5
Music1
பிரிவு 4 : வயது 14 முதல் 16 வரை
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பாடல் 4
Music1
பாடல் 5
Music1
பாடல் 6
Music1
பிரிவு 5 : வயது 17 முதல் 19 வரை
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பாடல் 4
Music1
பாடல் 5
Music1
பாடல் 6
Music1
பாடல் 7
Music1
பிரிவு 6 : வயது 20-க்கு மேல்
PDF2_new
பாடல் 1
Music1
பாடல் 2
Music1
பாடல் 3
Music1
பாடல் 4
Music1
பாடல் 5
Music1
பாடல் 6
Music1
பாடல் 7
Music1

போட்டிகளின் விதிமுறைகள்

பொது விதிமுறைகள்

 1. போட்டியாளர்கள் தமிழ் மரபு சார்ந்த ஆடைகளையே அணிந்து வருதல் வேண்டும்.
 2. நெற்றியில் நீறு அணிந்திருத்தல் வேண்டும்.
 3. நடுவர்களின் முடிவே இறுதியானது; உறுதியானது.  ஏதேனும் மறுப்பு தெரிவிப்பதாக இருப்பின் போட்டி ஒருங்கிணைப்பாளரை அணுகுதல் வேண்டும்.
 4. விதிமுறைகள் இறுதி நேர மாற்றங்களுக்கு உட்பட்டது. மாற்றங்கள் இருப்பின் முன்னதாகப் போட்டியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

திருமுறை ஓதும் போட்டி

  1. திருமுறை ஓதும் போட்டி ஆறு (6) பிரிவுகளில் நடத்தப்படும். அவை பின்வருமாறு.
   • பிரிவு 1: வயது 5 முதல் 7 வரை
   • பிரிவு 2: வயது 8 முதல் 10 வரை
   • பிரிவு 3: வயது 11 முதல் 13 வரை
   • பிரிவு 4: வயது 14 முதல் 16 வரை
   • பிரிவு 5: வயது 17 முதல் 19 வரை
   • பிரிவு 6: வயது 20க்கு மேல்
  2. போட்டியாளர்களின் பிறந்த ஆண்டு அடிப்படையில் வயது கணிக்கப்படும்.
  3. போட்டியாளர் அவருக்குரிய பிரிவில் குலுக்கி எடுக்கப்படும் ஒரு பாடலை மட்டுமே பாடுதல் வேண்டும். தொடர்ந்து, அவர் பாடிய பாடலுக்குப் பொருள் விளக்கம் கூறுதல் வேண்டும். கூறப்படும் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்ட கையேட்டில் உள்ளவாறு இருத்தல் வேண்டும். போட்டியாளரின் சுய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  4. பாடப்படும் பாடல் உச்சரிப்புப் பிழை இன்றி குறுவட்டில் உள்ள படியே பண்ணோடும் தாளத்தோடும் இருத்தல் வேண்டும்.
  5. பாடலுக்கு முன்னும் பின்னும் ‘திருச்சிற்றபலம்’ என்று சொல்லுதல் வேண்டும்.
  6. கையேட்டில் உள்ள பாடலுக்கும் ஒலி வட்டில் உள்ள பாடலுக்கும் ஏதேனும் வேறுபாடு கண்டால் ஒலி வட்டையே பின்பற்றுதல் வேண்டும்.
  7. போட்டியாளர்கள் தாளம், சுருதி போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்த முடியாது.
  8. குலுக்கி எடுக்கப்பட்டப் பாடலைப் பாடி பொருள் கூறிய பின்னர், வேறு ஒரு புதிய பாடல் (குறுவட்டில் இல்லாத பாடல்) தமிழில் போட்டியாளருக்குக் கொடுக்கப்படும். (பிரிவு 1 தவிர). போட்டியாளர் அப்பாடலைப் பாடுதல் (பண் தெரிந்தால்)  அல்லது உச்சரிப்புப் பிழையின்றி வாசித்தல் வேண்டும்.
  9. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மூவருக்குக் கேடயமும் நற்சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாண்டு நடுவரால் சிறப்பாகப் பாடியதாகக் கருதப்படும் போட்டியாளருக்கு மட்டுமே சிறப்பு பரிசாக ரொக்கம் வழங்கப்படும்.
  10. மதிப்பிடும் முறை:-
   • பிரிவு 1

TP Point

 • பிரிவு 2 முதல் 6 வரை

 

TP Point2

 1. போட்டிக்கான பாடல்களை வரிவடிவாகவும் ஒலி வடிவாகவும் www.saivaperavai.org என்னும் பேரவையின் அகப்பக்கத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பேச்சுப் போட்டி

  1. இவ்வாண்டு பேச்சுப் போட்டி பொது பிரிவாக மட்டுமே நடத்தப்படும்.
  2. போட்டியாளர்கள் அனைவரும் மண்டபத்தில் அமர்ந்த பின் அனைவருக்கும் ஒரு பதிகம் (தமிழில்) வழங்கப்படும்.
  3. போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அப்பதிகத்தினை முழுமையாக விளக்குவார். அச்சமயம் போட்டியாளர்கள் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
  4. பின், போட்டியாளர்களுக்கு ஏறத்தாழ 90 நிமிடங்கள் வழங்கப்படும். அவ்வேளையில் போட்டியாளர்கள் அப்பதிகத்தின் பொருளினைக் கோர்வையாக 5 நிமிடங்கள் பேசுவதற்குத் தயார் செய்தல் வேண்டும். 90 நிமிடங்களுக்குப் பின்னர் போட்டி தொடங்கப்படும்.
  5. போட்டியாளர்கள், பேசும் பொழுது சிறு குறிப்புகளைப் பயன்படுத்தலாம். ஆனால், கருத்துகளைக் கோர்வையாக எழுதி அதனைக் கட்டுரையாக வாசித்தல் கூடாது.
  6. குறிப்புகள் இன்றிப் பேசும் போட்டியாளர்களுக்குச் சிறப்பு புள்ளிகள் வழங்கப்படும்.
  7. கருத்து, உச்சரிப்பு, மொழிவளம், பாவம், கருத்துக் கோர்வை போன்றவற்றினைப் போட்டியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
  8. போட்டி முடியும் வரை போட்டியாளர்கள் மண்டபத்திலிருந்து வெளியே செல்லுதல் கூடாது.
  9. வெற்றி பெற்ற மூவருக்குக் கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொண்ட ஏனையோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.
  10. மதிப்பிடும் முறை:

PP Point

ஓவியப் போட்டி

  1. இவ்வாண்டு ஓவியப் போட்டி பொது பிரிவாக மட்டுமே நடத்தப்படும்.
  2. போட்டியாளர்கள் அனைவரும் மண்டபத்தில் அமர்ந்த பின் அனைவருக்கும் ஒரு பதிகம் (தமிழில்) வழங்கப்படும்.
  3. போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அப்பதிகத்தினை முழுமையாக விளக்குவார்.
  4. பதிகத்தின் பொருள் விளக்கம் கூறப்படும் போது, போட்டியாளர்கள் கூர்ந்து கேட்டுக் கொண்டு, பின் அப்பதிகத்தில் கூறப்பட்ட ஏதேனும் ஒரு காட்சியினை வரைதல் வேண்டும்.
  5. போட்டியாளர்கள் ஓவியத்தினைக் கற்பனைச் செய்ய 30 நிமிடங்கள் நேரம் வழங்கப்படும்.
  6. 30 நிமிடங்களுக்குப் பின்னர்  போட்டியாளர்கள் ஓவியத்தினை வரைந்து வண்ணமிட இரண்டு (2) மணி நேரம் வழங்கப்படும்.
  7. போட்டியாளர்கள் வரைந்து வண்ணமிடுவதற்குத் தேவையான வண்ணக் கலவைகளைச் சுயமாகக் கொண்டு வருதல் வேண்டும்.
  8. போட்டியாளர்கள் பேரவை வழங்கும் ஓவியத் தாளில் மட்டுமே வரைய வேண்டும்.
  9. வரையப்படும் ஓவியம் ஒரே காட்சியாக மட்டுமே இருத்தல் வேண்டும். பல காட்சிகளைக் கொண்ட ஒரு தொகுப்பாக வரைதல் கூடாது.
  10. வெற்றி பெற்ற மூவருக்குக் கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொண்ட ஏனையோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.
  11. மதிப்பிடும் முறை:

DC Point

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

சிவசிவ