சித்தாந்த சிந்தனைக் களம் – 39

வணக்கம். எதிர்வரும் ஜூலை 3 அன்று, மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் நீலாய் சைவ சமய மன்றம் இணைந்து, “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தலைப்பில் சித்தாந்த சிந்தனைக் களம் ஒன்றினை நடத்தவிருக்கிறார்கள். நுழைவு முற்றிலும் இலவசம். அன்பர்கள் அனைவரும் நிகழ்வினில் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

SK 39

மூன்றாம் திருமுறைப் பெருவிழா 2017

அன்புடையீர். வணக்கம். மலேசிய சைவ சமயப் பேரவை, மூன்றாம் முறையாக திருமுறைப் பெருவிழாவினை 2017-ல் நடத்தவிருக்கின்றது. விழாவுக்கான திகதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். திருமுறைப் பெருவிழாவில் திருமுறை ஓதும் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படும். திருமுறை ஓதும் போட்டியில் பங்கெடுக்க விரும்பும் அன்பர்கள், மலேசிய சைவ சமயப் பேரவையின் அகப்பக்கத்தில் திருமுறைப் பாடல்களின் எழுத்து வடிவினையும், ஒலி வடிவினையும் பதிவிறக்கம் செய்து பயிற்சிப் பெற தொடங்கலாம். பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தைச் சொடுக்கவும் திருமுறைப் பெருவிழா 2017 .

சித்தாந்த சிந்தனைக் களம் 38

வணக்கம். எதிர்வரும் ஜூன் 5 அன்று, மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் ஈப்போ, சிம்மோர், தம்பூன் சைவ சமய மன்றங்கள் இணைந்து, “இன்பமே என்னாளும் துன்பமில்லை” என்ற தலைப்பில் சித்தாந்த சிந்தனைக் களம் ஒன்றினை நடத்தவிருக்கிறார்கள். நுழைவு முற்றிலும் இலவசம். அன்பர்கள் அனைவரும் நிகழ்வினில் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

SINTHANAIK KALAM 38

3-ஆம் உலக சைவ சமய மாநாடு மின்பதிவு

வணக்கம். எதிர்வரும் 3-ஆம் உலக சைவ சமய மாநாட்டில் பங்கெடுக்க விரும்புவோர், இன்று முதல் மின்பதிவும், மின்வழி கட்டணமும் செலுத்தலாம். பேரவையின் அகப்பக்கத்தில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய இந்த அகப்பக்கத்திற்குச் செல்லவும். மின்பதிவு