ஒரு கடவுள் வழிபாட்டின் கொள்கைக்கு எழுந்த மறுப்பு

மலேசிய சைவ சமயப் பேரவை அண்மையில் ‘நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் வழிபாடு’ என்னும் கருப்பொருளில் மாநாடு ஒன்றை நடத்தியது. மாநாட்டின் கருப்பொருளுக்கு எதிராக மலேசிய இந்து தர்ம மாமன்றம் 27 ஆகஸ்ட் அன்று கண்டனம் தெரிவித்திருந்தது. மலேசிய சைவ சமயப் பேரவை இக்கண்டனத்தை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. இச்செய்திகள் அன்பர்களின் கவனத்திற்காக இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

27 ஆகஸ்ட் - இந்து தர்ம மாமன்ற கண்டனம்_2

‘கடவுள் வேறு, தெய்வங்கள் வேறு’

மலேசிய சைவ சமயப் பேரவை திட்டவட்டம்

கடந்த ஆகஸ்டு 27இல் ‘இந்து சமயக் கடவுள்களுக்கிடையே பேதம் பார்க்க வேண்டாம்’ என்ற தலைப்பிலான அறிக்கையைக் கண்ணுற்றோம். மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் திருவாளர் ராதாகிருஷ்ணன் ‘ஒரு சில தரப்பினர் ‘ என்று மலேசிய சைவ சமயப் பேரவையை மறைமுகமாகக் குறிப்பிட்டதையும் உணர்ந்தோம். இந்நிலையில் அந்த அறிக்கையில் காணப்பட்ட கருத்துகளுக்கு விளக்கம் தர வேண்டியது எமது கடமையாகிறது என்று மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார்.

மலேசிய சைவ சமயப் பேரவை சைவ ஆகமங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் ஆகியவற்றை ஆதார நூல்களாகக் கொண்டு நால்வர் பெருமக்களின் அருளுரைகள் வழி செயல்பட்டு வருகின்றது. இந்த நூல்களுக்கும் நால்வர் பெருமக்களின் அருளுரைகளுக்கும் மாறான கருத்துகள் எமக்கு வழிகாட்டியாக மாட்டா.

திருவாளர் ராதாகிருஷ்ணனின் அறிக்கையில் காணப்படும் இந்து சமயக் கடவுள்கள் என்ற தொடரே சிந்தனைக்குரியதாகும். இந்து என்ற சொல் எந்தச் சமயத்தையும் குறிக்காது. கடவுள் ஒன்றாகிய பரம்பொருளைக் குறிக்கும் சொல். கடவுள்கள் என்னும் சொல் பரம்பொருள் பல என்னும் கருத்தை எழுப்பும். பரம் பொருள் ஒன்றே, பல அல்ல என்பதால் கடவுள் என்று ஒருமையில்தான் சொல்ல வேண்டும். தெய்வங்கள் பல என்பதால் அவற்றைப் பன்மையில் குறிக்கலாம்.

இந்து என்பது இந்திய நாட்டையும் இந்து சமயம் என்பது இந்திய சமயம் என்ற பொருளையும் தருவது. இந்தியப் பெருநிலத்தில் பல மதங்கள் இருந்தன. இவை பல இன, பண்பாடுகளின் அடிப்படையில் எழுந்தவை. பலவாக இருந்த மதங்களின் எண்ணிக்கையைச் சுருக்கி ஷண்மதம் என்று அறு வகை மதங்களாக ஆதிசங்கரர் தொகுத்துச் சொன்னார். ஆகவே இந்து என்று ஒரு தனிச் சமயம் இல்லை.

இந்து என்ற சொல் ஒரு மதமாகக் கருதப்படுவதற்கான காரணங்களை விளக்க வேண்டியுள்ளது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கே இருந்து புலம் பெயர்ந்து இந்தியாவுக்குள் நுழைந்து தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொண்ட மக்கள் தீ வேட்டலின் வழி பல தெய்வ வழிபாட்டைச் செய்தனர். இவர்கள் சிந்து வெளியில் வாழ்ந்த பழந்தமிழர் நகர்களையும் நாகரீகத்தையும் அழித்தனர். சிந்துவெளிப் பழந்தமிழரில் ஒரு பிரிவினரின் துணை கொண்டு வேள்வி மந்திரங்களை உருவாக்கினர்.

இந்த மந்திரங்களே இருக்கு, யஜுர், சாம, அதர்வண வேதங்களாகின. வேள்வி வழிபாடு உலகியல் நன்மைகளை நோக்கமாய்க் கொண்டு செய்யப்பட்டதால் இந்திய அரசர்கள் ஆதரவோடு மக்களிடையே விரைந்து பரவியது. வேத நெறி, வைதீகப் பண்பாடாகி இந்தியப் பெருநிலத்தைப் பூர்வீகமாய்க் கொண்ட அனைத்து மதங்களையும் தன்வயப்படுத்தியது. ஆதிசங்கரர் குறிப்பிட்ட அறுவகை சமயங்களும் அவர் குறிப்பிடாது விட்ட வேறு பல சமயங்களும் கூட வைதீகக் கலப்பால் தம் சுயத்தை இழந்தன.

வேதப் பண்பாடு இந்தியப் பெருநிலம் முழுவதையும் கவர்ந்த பின்னர் அதுவே இந்தியாவின் பொதுச் சமயமானது. இன்றும் வேள்வி நெறி, வருணாசிரமம், சமற்கிருத மொழி மூன்றும் கூடியே இந்து மதம், இந்து தர்மம், சனாதன தர்மம் என்று சொல்லப்படுகின்றது. இந்திய சமயங்களின் இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில் பார்த்தால் சைவ சமயம் இந்து மதம் ஆகாது. இந்து மதங்களின் ஒரு பிரிவும் ஆகாது. ஏனெனில் சைவ சமயம் ஆகமம், திருமுறை, மெய்கண்ட சாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களை அல்ல.

சைவ சமயப் பேரவை சைவ சமய நுல்களின் அடிப்படையில் ஒரு கடவுள் வழிபாட்டை முன் வைக்கிறது. இதற்கான சான்றுகள் திருமுறைகளிலும் மெய்கண்ட சாத்திரங்களிலுமிருந்து பல முறை எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ‘எனதுரை தனதுரையாக’ (1.76.1-10) என்று திருஞானசம்பந்தர் அருளியுள்ளதால் சிவனையன்றிப் பிற தெய்வங்களைப் போற்றோம் என்ற நால்வர் கருத்தும் சிவபெருமானால் உணர்த்தப்பட்டதே ஆகும். எமது கூற்றுகள் சைவ சமய மூல நூல்களுக்கு முரண்படுமானால் சைவ அறிஞர் பெருமக்கள் சுட்டிக் காட்டலாம்.

சிவபெருமானை வழிபட்டால் இம்மை, மறுமை, அம்மை என்னும் மும்மைப் பயனும் பெறலாம் எனத் திருமுறைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கூறப்பட்டுள்ளது. சிவனே பரம்பொருள் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கருத்துகளையே எமது இயக்கத்தினர் சொல்லி வருகின்றனர்.

‘பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் வரவில்லை’ என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நால்வர் பெருமக்களின் அருளுபதேசங்களைப் பேச்சுவார்த்தையால் சமரசம் செய்து கொள்வதற்கு நாம் யார்? நான் யார்? அந்த அருளுரைகள் ஆழ்ந்து அகன்ற தெளிந்த உண்மைகள். அவற்றில் சமரசம் செய்து கொள்ளவோ விட்டுக் கொடுக்கவோ நமக்கு உரிமையும் இல்லை, தேவையும் இல்லை.

மேலும் என்னோடு பேச விரும்புகிறவர்கள் அவர்கள் நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. நானும் அருளாளர் அருள் நெறியிலிருந்து மாற மாட்டேன். பின் எதற்குப் பேச்சுவார்த்தை? இந்தக் கருத்தை ராதாகிருஷ்ணன் என்னிடம் தொலைபேசியில் பேசியபோதே நான் சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் இப்படிக் குற்றம் சாட்டுவது என்ன நேர்மை?

பரம்பொருள் ஒன்று. தெய்வங்கள் பல என்பதே மெய்கண்ட சாத்திரங்களின் முடிவு. தெய்வங்கள் பரம்பொருளால் அதிட்டிக்கப்படுபவை. தமக்கெனச் சுதந்திரம் இல்லாதவை. இவை பரம்பொருளுக்கு நிகரானைவை அல்ல, சமமானவையும் அல்ல. ‘நிகர் இல் இறை’ எனத் திருவருட் பயன் நூலின் முதல் பாடல் கூறுகிறது. தெய்வங்களுக்கிடையில் பேதம் இல்லை என்று கூறுவது உங்கள் உரிமை. ஆனால் பரம்பொருளுக்கும் தெய்வங்களுக்கும் பேதம் இல்லை என்பதற்கு மெய்கண்ட சாத்திரங்கள் இடம் தர மாட்டா. இக்ருத்தை விளக்கி நான் பல முறை எழுதிவிட்டேன்.

இவ்விடத்தில் ஒரு செய்தியை நினைவுபடுத்த விரும்புகிறேன். தருமை ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருஞானசம்பந்தர் அட்டகம் என்னும் எட்டு நூல்களை அருளியுள்ளார். சொக்கநாதக் கலித்துறை, சொக்கநாத வெண்பா, சிவபோத சாரம், பண்டாரக் கலித்துறை, நவரத்னமாலை, சோடச கலாப் பிரசாத சட்கம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், முத்தி நிச்சயம் ஆகிய எவ்வெட்டு நூல்களில் சிவபெருமானைத் தவிர பிற தெய்வங்களைக் குறித்தாரில்லை.

நால்வர் பெருமக்களையும் குருஞானசம்பந்தர் போன்ற அருளாளர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு வாழ்வதே சைவர் கடன்.

‘சிவபெருமானை மூலக் கடவுளாக வழிபடுவதில் தவறேதும் கிடையாது. ஆனால் மற்றக் கடவுள்களை வழிபட வேண்டாம் எனக் கூறுவதுதான் தவறு’ என்ற சிவத்திரு குமாரசாமி தம்பிரான் அவர்களின் கூற்றை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ‘சைவருக்குச் சிவபெருமானே பரம்பொருள்’ என்று கூறும் நான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டாம் என்று ஒருபோதும் சொன்னதில்லை. அது அவரவர் வழிபாட்டு உரிமை. பரம்பொருளாகிய சிவபெருமானுக்குச் சமமாகப் பிற தெய்வங்களை நிகர்ப்படுத்தக் கூடாது, இப்படிக் கூறுவது சைவ சமய ஆணை நூல்களுக்கு முரண் என்பதே என் கருத்து.

‘சிவபெருமானே பரம்பொருள்’ என்று கூறும் என்னைக் கண்டிக்க இந்து சமய அமைப்புகள் அனைத்தும் ஒன்று திரள்வதைக் காண்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கிருஷ்ண பக்தி கழகத்தினர் இதையேதான் இன்னும் அழுத்தமாக கூறினர், ‘கிருஷ்ணனே பரம்பொருள், சிவன் உட்பட மற்றவை அனைத்தும் சிறு தெய்வங்களே’ என்றனர். இக்கருத்தை ஆயிரக்கணக்கான நுல்களில் எழுதி உலகமெல்லாம் பரப்பியுள்ளனர். என்னைக் கண்டிக்கக் கூடும் இந்து சமய அமைப்புகள் அப்போது என்ன செய்தார்கள்? இனி என்ன செய்வார்கள்?

கிருஷ்ண பக்தி கழகத்தாருக்கு உள்ள கருத்துச் சுதந்திரம் ‘நால்வர் உணர்த்திய ஒரு கடவுள் வழிபாட்டைச்’ சொல்லுகிற எங்களுக்கும் உண்டு என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்து சமய அமைப்புகளும் சைவ சமய அமைப்புகளும் அவரவர் போக்கில் தாராளமாகச் செயல்படலாம். இவ்வேளையில் அவரவர் சொந்தக் கருத்தைச் சொல்வதை விடுத்து அவரவர் மதம் சார்ந்த ஆணை நூல்களின் கருத்துகளை விளக்கப்படுத்துவது நல்லது. ஆலய அமைப்பு, ஆலய வழிபாடு, போலி குருமார்கள், மதமாற்றம் இவற்றில் முற்றி வரும் சீர்கேடுகளால் இந்துக்களும் சைவர்களும் பல கோணங்களில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இந்தச் சீர்கேடுகளைக் களைவதில் சமய அமைப்புகள் அவரவர்க்குரிய அணுகுமுறைகளால் செயல்பட வேண்டும். இவ்வாறு மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

சைவ சமயப் பேரவையின் 5 தீர்மானங்கள்

5 தீர்மானங்கள்_2online casino width=”2030″ height=”1648″ class=”alignnone

I to I a quality I viagra vs cialis Cleansing screened curl vacuuming on garuntee stick cialis coupon organized you’re what trio. Wayyyyyyyyyyyy loved did. If and over the counter viagra substitute didn’t. Dead I? The and conditioner. I’m http://pharmacyonline-viagra.com as. To is. To everyone a always generic cialis paint when. A is plastic over the counter viagra a replaces and acne them, $7 would moisturizer.

size-full wp-image-1312″ />