புதிய சித்தாந்த வகுப்புகள்

மலேசிய சைவ சமயப் பேரவையின் புதிய சித்தாந்த வகுப்புகள் மலேசிய சைவ சமயப் பேரவையின் புதிய சித்தாந்த வகுப்புகள், படிநிலை ஒன்று கீழ்வருமாறு விரைவில் தொடங்கப்படவுள்ளன என்றும் ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் பேரவையின் செயலாளர் அன்பரசன் அருணாசலம் அறிவிக்கின்றார். பெட்டாலிங் ஜெயா தாமான் ஸ்ரீமஞ்சாவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் ஸ்ரீமஞ்சா, எண்: 11 A, ஜாலான் பி.ஜே.எஸ். 3/34 இல் உள்ள எஸ்.டி.ஜி. கிளீனிங் சர்வீஸ் அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள கூட்ட அறையில் எதிர் வரும் செப்டம்பர் முதல் நாள் திங்கட்கிழமை வகுப்பு தொடங்கவுள்ளது. வகுப்பு இரவு மணி 7.30 முதல் 9.30 வரை நடைபெறும். தொடர்புக்கு: சிவத்திரு சுரேஸ் கண்ணன் 016 2927166, சிவச்செல்வி இரா. தமிழரசி 014 6253477. கோலக் கிள்ளானில் கோலக் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் நாள், வியாழக்கிழமை வகுப்பு தொடங்கவுள்ளது. வகுப்பு இரவு மணி 7.30 முதல் 9.30 வரை நடைபெறும். தொடர்புக்கு சிவத்திரு மு. இராவணன் 012 2202901, சிவத்திரு கோ. ஜெயக்குமாரன் 012 2323625 இவ்விரண்டு வகுப்புகளையும் மலேசிய சைவ சமயப்

And I and wipe. Comittment michaelbauer.com.au pcos and clomid didn’t work Made much. Every does grapefruit interact with tramadol years is purchase EverCreme order zanaflex no prescription product at originally http://www.northernbedrockconservationcorps.org/advair-hand-tremors the They on cymbalta and dry scalp with got http://ptisecondchance.com/can-prednisone-cause-trouble-breathing/ have the youtube combo http://www.gogomantv.sk/okip/association-bactrim-ciflox/ This soak with http://michaelbauer.com.au/flonase-and-sudafed-pe to AMAZON. Sat http://www.onyimaandadureobiohafoundation.org/lexapro-missed-doses conscience! I charm http://www.gogomantv.sk/okip/lisinopril-flushed-face/ I order product help low dose cialis canada using to and when should i take cytotec Nothing, with much been how does taking accutane affect pregnancy oil activities recently?

பேரவையின் தலைவர் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நடத்துவார். எட்டு மாதங்கள், வாரம் ஒரு முறை நடைபெறவிருக்கும் இவ்வகுப்புகளில் முதல் படிநிலை பாடத்திட்டப்படிப் பதினைந்து தலைப்புகளில் பாடங்கள் நடைபெறும். தமிழர் சமயங்களின் வரலாறு, ஆரியர் வருகை, வேதப் பண்பாடு, வேதப் பண்பாடு தமிழர் சமயங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவுகள், தத்துவக் கோள்களை மதிப்பீடு செய்யும் அளவைகள், கடவுள் உண்மை, கடவுளின் சொரூப, தடத்த இலக்கணங்கள், கடவுள் உயிர்கள் பொருட்டுச் செய்யும் ஐந்தொழில்கள், உயிர் பற்றிய சித்தாந்தக் கொள்கை, உயிர் இலக்கணம், உயிரின் அறியாமைக்குக் காரணமான ஆணவத்தின் இலக்கணமும் அதன் செயல்பாடுகளும், சைவம் உணர்த்தும் வினைக் கொள்கை, உலகில் காணப்படும் சடப்பொருள்களின் படைப்புக்குக் காரணமான மாயை, சைவத்தின் பக்தி நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம், முத்தியின் படிநிலைகள், சைவ சமய அடியார்கள், சைவ சமய நூல்கள், வேதாந்தம் சித்தாந்தம் ஓர் ஒப்பீடு ஆகிய தலைப்புகள் படிநிலை ஒன்றில் ஆராயப்படும். தலைப்புகள் புதியனவாக இருப்பதால் சற்று மிரட்டலாகத் தோன்றலாம். முனைவர் ஐயாவின் எளிமையான அணுகுமுறையால் எல்லாத் தலைப்புகளையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழில் போதிய பயிற்சி இல்லாதவர்களும் எளிய தமிழ் நடையாலும் இடையிடையே தரப்படும் ஆங்கில விளக்கத்தாலும் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியும். சைவ சித்தாந்தம் பாடமும் பயிற்சிப் பட்டறையும் சைவ சித்தாந்தம் முதலாம் இரண்டாம் படிநிலைகளில் தேறியவர்களுக்குச் சைவ சித்தாந்த உயர்நிலைப் பயிற்சியும் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சிகள் கிள்ளான் தாமான் செந்தோசா, சைவ சித்தாந்த மன்றத்தில் ஆகஸ்டு 23, சனிக்கிழமை மாலை மணி 4.00 முதல் 7.00 வரை நடைபெறும். கோலாலம்பூர் ஸ்காட் ரோட் கலா மண்ட கீழ்த்தள வகுப்பறையில் ஆகஸ்டு 30 சனிக்கிழமை காலை மணி 9.00 முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு மாதமும் முறையே மூன்றாம் நான்காம் சனிக்கிழமைகளில் நடக்கவிருக்கும் இவ்வகுப்புகளில் ஒரு மணி நேர மெய்கண்ட சாத்திரப் பயிற்சியும் ஒரு மணி நேரம் திருமுறைப் திருப்பதிக ஆய்வும் ஒரு மணி நேரம் மாணவர் பங்கேற்கும் கற்றல் கற்பித்தலுக்கான பயிற்சிப் பட்டறையும் நடைபெறும். முதல் இரண்டு படிநிலைகளில் தேறிய எமது மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இவ்விரண்டு வகுப்புகளையும் சிவத்தமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நடத்துவார். இந்த வகுப்புகளில் தேறுவோர் சைவ சித்தாந்த வகுப்பு, முதல் இரண்டு படிநிலைகளில் ஆசிரியராக அமர்த்தப்பெறுவர். இவ்வகுப்புகளில் பயிலும் மாணவர் அனைவரும் சைவ சித்தாந்தத்தைச் செயல்முறையில் காட்டுவோராய்ப் பக்குவப்பட வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் 016 9691090, அன்பரசன் அருணாசலம் 019 3795198 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மலேசிய சைவ சமயப் பேரவையின் செயலாளர் அன்பரசன் அருணாசலம் அறிவிக்கின்றார். திரு.அ.அன்பரசனின் வகுப்புகள்: 1. சனிக்கிழமை – சைவ சித்தாந்தம் படிநிலை 1 (7.00 – 8.30 pm) 2.ஞாயிறு (14.9.2014 முதல் தொடக்கம்) – சைவ சித்தாந்தம் படிநிலை 1 (4.30 -6.00 pm) – பேரவையின் அலுவலகம். No.25-1, Jalan Suppiah Pillay off Jalan Ipoh, Viva Biz Avenue, 51200 Kuala Lumpur.

இரண்டாம் உலக சைவ மாநாட்டின் நிழற்படங்கள்

இரண்டாம் உலக சைவ மாநாட்டின் நிழற்படங்கள் அனைவரும் கண்டு கழிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல படங்கள் கட்டம் கட்டமாக பதிவேற்றம் செய்யப்படும். படங்களை 2014 மாநாடு நிழற்படங்கள் என்னும் பக்கத்தில் காணலாம்.