அறிமுகம்
வரலாறு
மலேசிய சைவ சமயப் பேரவையின் முதல் அமைப்புக் கூட்டம் 2001ஆம் ஆண்டில் நடந்தது. கோலாலம்பூரில் இயங்கி வந்த சைவ சமய அமைப்புகளைச் சேர்ந்த பேராளர் பலர் இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சைவ சமய அமைப்புகளுக்கானப் பேரவை ஒன்று அமைவது காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்றுக் கொண்டனர். பேரவையின் கொள்கை, செயல்பாடுகள் பற்றிய பல கலந்துரையாடல்களுக்குப் பின் 2011இல் பேரவை பதிவு பெற்றது.
நிறுவனர்
சைவ சமயப் பேரவை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து சைவ சமய ஆர்வலர் துணையுடன் வெற்றி கண்டவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம். முனைவர் ஐயா சைவ சித்தாந்தத் துறையில் முறையாகப் பயிற்சி பெற்றவர். மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் பக்தி இலக்கியம் உட்படப் பயின்று இளங்கலைப்பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத்தைச் சிறப்புப் பாடமாய்க் கற்று முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
"எண் குணத்தானே என் மனத்தான்"
நோக்கங்கள்
- சைவ சமயம் தனித்த பெருஞ் சமயம் என்ற உண்மையை உலகுக்கு உரத்துக் கூறுதல்.
- தமிழரின் அறிவார்ந்த சமயம் சைவ சமயமே என்ற உண்மையைப் பரப்புதல்.
- சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை உணர்த்துதல்.
- சைவ சமயத்தை இந்துக்களுக்கும் தமிழருக்குமான வாழ்க்கை முறையாகத் தேவாரம் திருவாசகம் கொண்டு பரப்புதல்.
- சைவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்துதல். பதின்ம வயதினருக்கான பட்டறைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல். சைவ சமய மாத இதழ் நடத்துதல்.
- திருமுறையைப் பரப்பும் நோக்கில் வகுப்புகள், ஆய்வரங்குகள், போட்டிகள், விழாக்கள் நடத்துதல்
"சிவன் என்னும் செம்பொருள், எனையாளும் மெய்ப்பொருள்"
தொடர்புக்கு
தலைவர் / President :
முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
Dr. Nagappan Arumugam MA., Ph.D.
No 32A, Jalan Padang Belia Brickfields, 50470 Kuala Lumpur
செயலாளர் / Secretary :
சிவத்திரு. செல்வகுமாரன் நடராசன்
Mr. Selvakumaran Nadarajan
No 32A, Jalan Padang Belia Brickfields, 50470 Kuala Lumpur